தனியார் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

தனியார் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
X
தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் குழந்தைகள் உற்சாக நடனம் ஆடினர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலை தனியார் திரையரங்கம் அருகே கலைவாணி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அமைந்துள்ளது . இந்த பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்ட நிலையில், பள்ளியில் பயிலும் குழந்தைகள் பல்வேறு பாடலுக்கு அசத்தல் நடனம் ஆடினர். பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும், பள்ளியின் தாளாளர் அவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற பேச்சுப்போட்டி ,மாறுவேட போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது..பள்ளிக் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு குழந்தைகளின் கண் கவர் நடன கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்...
Next Story