உதகையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நடைபெற்றது

உதகையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நடைபெற்றது
X
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கேடயம் வழங்கினார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நலத்துறையின் சார்பில் கடந்த 18.02.2025 அன்று நடைபெற்ற கலைத்திருவிழா என்ற பெயரில் விடுதியில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகளில், வெற்றிப்பெற்ற முதல், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் சுரேஷ்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story