உள்நாட்டு மீனவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்  போராட்டம் அறிவிப்பு

உள்நாட்டு மீனவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்  போராட்டம் அறிவிப்பு
X
கருங்கல்
தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் சார்பில் உள்நாட்டு மீனவர்கள் ஆலோசனை கூட்டம் கருங்கலில் நடைபெற்றது. யூனியன் செயலாளர் கருங்கல் அலக்சாண்டர் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் கடலோர மக்கள் சங்க தலைவர் ஜாண் போஸ்கோ, குமரி கடலோசை மக்கள் இயக்க செயலாளர் ஜீவன்ராஜ் ஆகியோர் சங்க உறுப்பினர்களுக்கு உறுப்பினர்  அடையாள அட்டைகளை    வழங்கி சிறப்புரையாற்றினர்.       கூட்டத்தில் பாரம்பரிய மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது. உள்நாட்டில் வாழும் மீனவர்களுக்கு கடலோர பகுதில் நடைமுறையில் உள்ள வறட்சி மற்றும் சேமிப்பு நிவாரண நிதி, இலவச வீடு போன்ற அனைத்து திட்டங்களையும் நடைமுறைப்படுத்த மாநில அரசை கேட்பது என்றும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 - ம் தேதி வியாழன் அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலுகம் முன் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.       கூட்டத்தில்  கடலோசை மக்கள் இயக்க துணைச்செயலாளர் எழிலரசன், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜேம்ஸ், பாடகர் கண்டன்விளை ராஜேந்திரன், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் ஆன்றனி, லிஜின், சமூக ஆர்வலர் பிரபு உட்பட பலர் பேசினர். ஜாண் ஜோசப்,ஜோணி, ஜோஸ், பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கருங்கல் கிளை பொருளாளர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.
Next Story