அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கன்னத்தில் அறைந்த இளம்பெண்

X
குமரி மாவட்டம் இடைக்கோடு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜான் கிரிஸ்டோபர் என்பவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ஜான் கிறிஸ்டோபர் பள்ளியில் இருந்தார். அப்போது பள்ளிக்கு 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். மாணவி ஒருவரின் பெயரை கூறி தனது மகள் எனவும், அவளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே தலைமை ஆசிரியர் தந்தையின் பெயரில் அட்மிஷன் போடப்பட்டிருக்கிறது. எனவே தந்தையை தவிர வேறு யார் வந்தாலும் குழந்தையை பார்க்க அனுமதிக்க கூடாது என்று கூறி சென்றதாக கூறியுள்ளார். இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் பள்ளியின் தலைமை ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி பின்னர் வகுப்பறையில் இருந்த தலைமை ஆசிரியர் ஜான் கிறிஸ்டோபரின் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார். மேலும் அவர் வைத்திருந்த செல்போனை கீழே தள்ளி சேதப்படுத்தி உள்ளார். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஜான் கிறிஸ்டோபர் அடுமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரையடுத்து தலைமை ஆசிரியரை தாக்கிய இளம்பண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story

