அஞ்சு கிராமத்தில் நகை கடைய உடைத்து நகைகள் கொள்ளை

அஞ்சு கிராமத்தில் நகை கடைய உடைத்து நகைகள் கொள்ளை
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் நாகர்கோவில், மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (45). இவர் அஞ்சுகிராமம் சோதனை சாவடி அருகே நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்ததும் இரவு நகைக்கடையை பூட்டி விட்டு சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்தார்.        இன்று காலை அவர் கடைக்கு சென்றபோது ஷட்டர் உடைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.        இது குறித்து அஞ்சு கிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையை  கடையிலிருந்து 55 பவுன் தங்க நகை மற்றும் 10 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.       சம்பவ இடத்துக்கு  மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மேலும் கொள்ளையர்கள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவை எடுத்து சென்றுள்ளனர். இதை அடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
Next Story