கோவில் பூசாரிகள் பேரவையின் சார்பில் ஆட்சியரிடம் மனு

X

மாத ஓய்வூதியம் உயர்த்தி தர வேண்டும் என மனு மனு அளித்தனர்
தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் நீலகிரி மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் இன்று உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது இந்த மனுவில் கிராம பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியம் 4 ஆயிரம் ரூபாயிலிருந்து பத்தாயிரம் ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி தரவேண்டும், அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்க தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், அனைத்து கிராம கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் பெரும் பூசாரிகள் இறந்தால் அவர்கள் பெரும் ஓய்வூதிய தொகையை அவரது மனைவிக்கு வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத தொகையும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும், நீலகிரி மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீருவிடம் வழங்கினர்.
Next Story