கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் ஆத்திரம் அடைந்த கூலி தொழிலாளி ஒருவர் தனது வீட்டின் முன்பு தேங்கி இருந்த கழிவு நீர் கால்வாய் கழிவுகளை அள்ளி வீதியில் வீசிய

கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் ஆத்திரம் அடைந்த கூலி தொழிலாளி ஒருவர் தனது வீட்டின் முன்பு தேங்கி இருந்த கழிவு நீர் கால்வாய் கழிவுகளை அள்ளி வீதியில் வீசிய
X
கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் ஆத்திரம் அடைந்த கூலி தொழிலாளி ஒருவர் தனது வீட்டின் முன்பு தேங்கி இருந்த கழிவு நீர் கால்வாய் கழிவுகளை அள்ளி வீதியில் வீசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்*
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் ஆத்திரம் அடைந்த கூலி தொழிலாளி ஒருவர் தனது வீட்டின் முன்பு தேங்கி இருந்த கழிவு நீர் கால்வாய் கழிவுகளை அள்ளி வீதியில் வீசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சியில் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி, தூய்மை பணி சரிவர நடைபெறாமல் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்த நாளிலிருந்து எந்த ஒரு தூய்மை பணியும் ஊராட்சியில் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஊராட்சி முழுவதும் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு காணப்படுகிறது. இதை பலமுறை ஊராட்சி மன்ற அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.‌ இந்நிலையில் பாளையம்பட்டி மேற்கு ரத வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி என்பவர் பொறுத்து பொறுத்து பார்த்து வேறு வழியில்லாமல் ஆத்திரத்தில் தனது வீட்டின் முன்பு கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருந்த கழிவுகள் அனைத்தையும் அகற்றி சாலையில் வீசி எறிந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மாதக்கணக்கில் கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
Next Story