உதகையில் சந்தை கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று முதல் துவங்கியது

உதகையில்  சந்தை கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று முதல் துவங்கியது
X
முதல் நாளான இன்று ஆதி பராசக்தி அலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலா
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் மலை மாவட்டம் ஆன நீலகிரி மாவட்டம் உதகை நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் சந்தை கடை மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது இதில் முதல் நாளான இன்று காலை முதலே சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது பின்பு மதியம் பொது மக்களுக்கு அன்னதானங்களுடன் ஆடல் பாடல் பஜனை என அம்மனின் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர் இதில் முதல் நாளான இன்று அம்மன் ஆதிபராசக்தி அலங்காரத்தில் காட்சி காட்சியளித்தார் இந்த ஊர்வலமானது நகரி முக்கிய பகுதிகளின் வழியாக வலம் வந்து சன்னிதானத்தை வந்தடைந்தது
Next Story