விழுப்புரத்தில் மாநில தடகள போட்டியில் பதக்கம் வென்ற போலீஸ் குழு

விழுப்புரத்தில் மாநில தடகள போட்டியில் பதக்கம் வென்ற போலீஸ் குழு
X
மாநில தடகள போட்டியில் பதக்கம் வென்ற போலீஸ் குழு
பெங்களூரில் கடந்த 4ம் தேதி முதல் 9 தேதி வரை, மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் நடந்தது. பல்வேறு மாநில அணிகள் கலந்துகொண்டனர். இதில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த காவல் துறை அணியினர் 5 போலீசார் கலந்துகொண்டனர்.இதில், திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய ஏட்டு வரலட்சுமி, தடை தாண்டும் ஓட்டத்தில் மூன்றாம் இடமும், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய முதல் நிலை காவலர் பிரகாஷ் வட்டு எறிதல் பிரிவில் முதலிடம் மற்றும் ஈட்டி எறிதல் பிரிவில் மூன்றாம் இடமும் பிடித்தனர்.இதே போல், கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி குண்டு எரிதல் போட்டியில் நான்காம் இடமும் பெற்றார். விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் எழிலரசி மற்றும் திண்டிவனம் காவல் நிலைய காவலர் அன்பரசு ஆகியோர் இப்போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினர்.மாநில போட்டிகளில் பதக்கங்களை வென்ற போலீஸ் குழுவினரை, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், எஸ்.பி., சரவணன் பாராட்டினார்.
Next Story