ஆரணியில் நூல்வெளியீட்டு விழா.

X

ஆரணி வாழ்வும், வரலாறும் என்ற நூலின் வெளியீட்டுவிழா ஆரணி பழைய பஸ்நிலையம் அருகி்லுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
ஆரணி, ஆரணி வாழ்வும், வரலாறும் என்ற நூலின் வெளியீட்டுவிழா ஆரணி பழைய பஸ்நிலையம் அருகி்லுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ஆரணியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஆர்.விஜயன் எழுதிய, ஆரணி வாழ்வும் வரலாறும் என்ற நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றதில் வி.டி.எஸ்.சங்கரன் தலைமை தாங்கினார், ஆரணியின் மூத்த வழக்கறிஞர் வி.பி.ஜெகதீசன் நூலினை வெளியிட டாக்டர். எஸ். வாசுதேவன் பெற்றுக்கொண்டார். முனைவர்.கு.பிரேமா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். ஒவ்வொரு இடத்தின் வரலாற்றையும் வருங்கால சந்ததியினர் அறியும் வகையில் நூல்கள் எழுதப்படவேண்டும் என்று நூலின் ஆசிரியர் விஜயன் தமது ஏற்புரையில் குறிப்பிட்டார். ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோயில் நிர்வாகிகள் கப்பல் கங்காதரன், ரேணுகாகங்காதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் இவ்விழாவில், பேராசிரியர் பூபாலன், மணிகண்டன், ஓய்வுபெற்ற மூத்த ஆசிரியர் ஜி.எஸ். சுப்பிரமணியன், எழுத்தாளர் செஞ்சி தமிழினியன், . மேலும் இதில் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவின் முடிவில் டாக்டர் வி.சுருதி நன்றி கூறினார். படச்செய்தி. ஆரணி வாழ்வும், வரலாறும் என்ற நூலின் வெளியீட்டுவிழா ஆரணி பழைய பஸ்நிலையம் அருகி்லுள்ள தனியார் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
Next Story