பட்டு சேலை உற்பத்தி மூலப்பொருட்களுக்கும், அரிசிக்கும் விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்.

பட்டு சேலை உற்பத்தி மூலப்பொருட்களுக்கும், அரிசிக்கும் விதிக்கப்படும் ஜிஎஸ்டி  வரியை ரத்து செய்ய வேண்டும்.
X
ஆரணி பட்டுசேலை உற்பத்தி மூலப்பொருட்களுக்கும், 25 கிலோ அரிசி மூட்டைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் பேசினார்
ஆரணி, ஆரணி பட்டுசேலை உற்பத்தி மூலப்பொருட்களுக்கும், 25 கிலோ அரிசி மூட்டைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் பேசினார். பாராளுமன்றத்தில் திங்கள்கிழமை பேசிய ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் பேசியது, ஆரணி நகரம் செல்லமாக பட்டு நகரமாக விளங்கி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலேயே அதிக வருவாய் நகரமாக ஆரணி நகரம் உள்ளது. பட்டு சேலை உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பால் பட்டுசேலை உற்பத்தியில் நஷ்டம் ஏற்படுகிறது. ஆகையால் நெசவாளர்கள் பாதிப்படைகின்றனர். மேலும் அரிசிக்கு புகழ் பெற்ற ஆரணி பகுதியில் 300க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளது. 25 கிலோ கொண்ட மூட்டைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பால் அரிசி விலை ஏற்றம் அடைகிறது. இதனால் ஏழை மக்கள் பாதிப்படைகின்றனர். ஆகையால் பட்டு சேலை மூலப்பொருட்களுக்கும், 25 கிலோ அரிசி பைகளுக்கும் வரியை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
Next Story