பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
டாஸ்மார்க் நிறுவனத்தில் ஆயிரம் கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்ட போது அவரைப் போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து திருவாரூர் பாஜக மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் மாவட்ட டாஸ்மாக் குடோனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடோன் கதவுகளை பிடித்து தள்ளி கதவை திறக்க முயன்றனர். தொடர்ந்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி கைது செய்ய முயன்றபோது திடீரென அருகே திருவாரூர்- மன்னார்குடி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து தனியார் அரங்கில் அடைத்தனர்.
Next Story



