மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்..

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்..
X
திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, பச்சை பயிறு, எள் உள்ளிட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் வீதிவிடங்கள் கிராமத்தில் சுமார் 100 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் பருத்தி சாகுபடியும், 100 ஏக்கர் பரப்பளவில் பச்சைபயிறு, உளுந்து மற்றும் எள் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி மேற்கொண்டிருந்தனர். அண்மையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பருத்தி, பச்சை பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழையின் காரணமாக செடிகள் அழுகத் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் தமிழக அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இன்றைய தினம் வீதிவிடங்கன் கிராம விவசாயிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Next Story