வட்டாட்சியர் மீது நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை.

வட்டாட்சியர் மீது நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை.
X
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையை ரத்துசெய்து வாழ்வாதாரத்தை பாதுகாத்து தருமாறு கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவாரூர் தாலுக்கா சுந்தரவளாகம் பகுதியில் உள்ள மந்தக்கரை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஆவணங்களுடன் வசித்து வரும் சுமதிதுரைசாமி , உமாசத்யராஜ் , லலிதாராமராஜன்,காந்திமதிசங்கர் உட்பட 14 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காத நிலையில் வட்டாச்சியர் அதிகார துஷ்பிரயோகம் செய்து ரியல் எஸ்டேட் செய்யும் நபருக்கு உறுதுணையாக அகற்ற உத்தரவிட்டுள்ளார். அதனால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கிராம மக்கள் குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கை ரத்துசெய்து வாழ்வாதாரத்தை பாதுகாத்து தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் அனைவரும் மனு அளித்தனர். இதில் கிராம கமிட்டியினர் கோவி.தமிழழகன் , புரட்சிநெப்போலியன் , துரைசெல்வம், ஜெயராமன், சுமதி ,விமலா உட்பட கிராம மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் .
Next Story