கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை.

கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை.
X
திருவாரூர் மாவட்டத்தில் மிகப் பிரசித்தி பெற்ற தியாகராஜர் ஆலயத்தில் ஆழித்தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 7 தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் திருவாரூரில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை.
வருகின்ற ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்ட விழா நடைபெறுவதை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து பெருமளவில் பக்தர்கள் வந்து செல்ல வசதிக்காக திருவாரூர் சுற்றியுள்ள நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திருவாரூர் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பாக தலைவர் ஆரூர் ராஜேந்திரன் தலைமையில் திருவாரூர் போக்குவரத்து கழக கிளை மேலாளர் மதிப்பிற்குரிய நடராஜனை சந்தித்து பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்து, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Next Story