சிறுமியை திருமணம் வாலிபர் கைது

சிறுமியை திருமணம் வாலிபர் கைது
X
கைது
உளுந்துார்பேட்டை அடுத்த செம்மணங்கூரை சேர்ந்தவர் ஜெயபால் மகன் கவியரசு, 26; 'டிவி' மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்தார். இவர், திருச்சியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்தாண்டு ஏப்ரல் 28ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதில், கர்ப்பமான சிறுமிக்கு கடந்த 10ம் தேதி திருச்சியில் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், கவியரசு மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story