ராமநாதபுரம் சாமி தரிசனம் செய்ய வந்த வட மாநில வாலிபர் உயிரிழப்பு

X
ராமநாதபுரம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இன்று காலை ஸ்படிகலிங்க தரிசனத்திற்காக ரூ.50 டிக்கெட் பெற்று வரிசையில் சென்று கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலம் சிக்கர் மாவட்டம் சிவாட்பாரி பகுதியைச் சேர்ந்த ராஜ்தாஸ்(59) என்பவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்ட கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கோவில் மருத்துவமனை கொண்டு சென்று மருத்துவர் பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் உடல் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுமதிக்கப்பட்டது. இறந்த நபர் சன்னியாசி என்பதும் தனியாக ராமேஸ்வரம் வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Next Story

