கோவை: ஊழலைக் கண்டித்து பாஜக மறியல் போராட்டம் !

தமிழக அரசின் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகளை கைது செய்த தமிழக அரசைக் கண்டித்து கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
தமிழக அரசின் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகளை கைது செய்த தமிழக அரசைக் கண்டித்து கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பாக காந்திபுரம் மாவட்ட அலுவலகத்தில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், பாஜக தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கணக்கானோரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து வேன்களில் அழைத்துச் சென்று மாலை விடுவித்தனர்.இதனால் காந்திபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story