போக்சோ வழக்கில் கைதான முதியவருக்கு  குண்டாஸ் 

போக்சோ வழக்கில் கைதான முதியவருக்கு  குண்டாஸ் 
X
மார்த்தாண்டம்
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ஜான்ரோஸ் (63). இவர் கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.        இந்த நிலையில் ஜான்றோசை குண்டர்த்தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார். இதனை அடுத்து கலெக்டர் அழகுமீனா உத்தரவின் படி ஜான்ரோஸ் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.       குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story