நாகர்கோவில் வாலிபரை தாக்கிய மீன் வியாபாரி கைது

நாகர்கோவில் வாலிபரை தாக்கிய மீன் வியாபாரி கைது
X
வடசேரி
நாகர்கோவில் அருகே ஆலம்பாறை பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை (29). மீன் வியாபாரி. இவருக்கும் கீழப்பெருவிளையை  சேர்ந்த அஜித் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.        நேற்று முன்தினம்  நாடான்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வைத்து இரண்டு பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது தங்கதுரை மற்றும் அவர் நண்பர் சேர்ந்து அஜித்தை கையாலும் பீர் பாட்டிலாலும்  தாக்கியுள்ளார்.        இதில் காயமடைந்த அஜித் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கதுரையை கைது செய்தனர். தலைமறைவான அவருடைய நண்பரை தேடி வருகின்றனர்.
Next Story