ஊராட்சியை இரண்டாக பிரிப்பது தொடர்பாக ஆட்சியரிடம் மனு

ஊராட்சியை இரண்டாக பிரிப்பது தொடர்பாக ஆட்சியரிடம் மனு
X
சிறுமலை ஊராட்சியை இரண்டாக பிரிப்பது தொடர்பாக பொது மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திண்டுக்கல்லில் உள்ள 306 ஊராட்சிகளில் தற்போது 8 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. அதேபோல் பெரிய ஊராட்சியாக இருக்கும் பகுதிகளை இரண்டு ஊராட்சிகளாக பிரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. "சிறுமலை ஊராட்சியை சிறுமலை மற்றும் தென்மலை ஊராட்சி என இரண்டாக பிரிப்பது சம்மந்தமாக செய்தி வெளியானது. எங்களுக்கு சிறுமலை ஊராட்சியை இரண்டாக பிரிப்பது தொடர்பாக சில ஆட்சேபனை உள்ளது. சிறுமலை ஊராட்சியை பிரித்து சிறுமலை என்றும் மற்றொன்று தென்மலை என்பதற்கு பதிலாக சிறுமலை புதூர் ஊராட்சி என்று அறிவிக்க வேண்டும். சிறுமலை புதூர் என்ற கிராமம் சுமார் 200 வருடங்களுக்கு முன்பாக தோன்றியது. இங்கு சுமார் 1500-ம் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். தென்மலையில் 500-க்கும் குறைவாக தான் உள்ளனர். சிறுமலை புதூர் வரையில் தான் மாநில சாலை உள்ளது. அதற்கு அடுத்ததாக வனச்சாலை வழியாக தான் தென்மலை செல்ல முடியும். சிறுமலை புதூருக்கு இரண்டு தனியார் பேருந்தும், இரண்டும் அரசு பேருந்தும் செல்கிறது. ஆனால் தென்மலைக்கு அரசு பேருந்து மட்டுமே செல்கிறது. சிறுமலை புதூரில் இணையதள வசதி உள்ளது. தென்மலையில் அலைபேசி வசதியே இல்லை. தற்போது அரசுக்கு சொந்தமான கட்டிடம் சிறுமலை புதூர் கிராமத்தில் உள்ளது, ஆகையால் புதிய பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்கான தேவை இல்லை" என தெரிவித்துள்ளனர்.
Next Story