கிள்ளியூர்: மாயமான வாலிபர் குளத்தில் சடலமாக மீட்பு

X
குமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதி மாங்கரை என்ற இடத்தை சேர்ந்தவர் தேவராஜ் மகன் சஜின் (24). எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று அப்பகுதியிலுள்ள காட்டாற்று குளம் கரையில் அவரது சட்டை மற்றும் செல்போன் இருந்துள்ளது. உடனடி கருங்கல் போலீசாருக்கும், குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து குளத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று இரவு குளத்திலிருந்து சஜினின் சடலம் மீட்கப்பட்டது. இதற்கிடையில் பெற்றோர் தடுத்து மகன் சாவில் மர்மம் உள்ளது என கூறியுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியினர் கூறுகையில், - நேற்று முன்தினம் இரவில் அந்த குளத்தங்கரையில் வாலிபர்கள் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், போலீசார் வந்ததும் ஒரு சிலர் ஓடியதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சஜினின் நண்பர்கள் அழைத்து விசாரித்தனர். தொடர்ந்து போலீசார் உறவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, பிரேத பரிசோதனை அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.
Next Story

