துறைமுக சாலையில் பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்பு!

X
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் ஏற்றுமதி, இறக்குமதிக்காக நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தனியார் அனல்மின் நிலையங்களுக்கு டிப்பர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று நிலக்கரியை ஏற்றி கொண்டு டிப்பர் லாரி துறைமுக சாலையில் வரும்போது திடீரென ஏற்பட்ட 10 அடி ஆழமான மரண பள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனை தொடர்ந்து மீட்பு வாகனம் மூலம் டிப்பர் லாரி மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பாேக்குவரத்து பாதிக்கப்டப்பட்டு பரபரப்பு நிலவியது.
Next Story

