ஓசூரில் தேனீக்கள் கொட்டி முதியவர் உயிரிழப்பு.

X

ஓசூரில் தேனீக்கள் கொட்டி முதியவர் உயிரிழப்பு.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தாசரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (75) இவர் சாலையோர வியாபாரி. சம்பவம் அன்று இவர் ஒசூர் மலைக்கோவில் அருகே மரத்தடியில் உப்பு, மிளகு உள்ளிட்டவைகளை வைத்து திருவிழாவில் வியாபாரம் செய்து வந்த போது, அங்கிருந்த மரத்தில் தேனீக்கள் கூட்டம் கலைந்து வெங்கடேசனை கொட்டி யது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை யில் அவர் சேர்கபட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி வெங்கடேசன் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story