தூத்துக்குடி கடலில் சங்கு குளித்த மீனவர் பரிதாப சாவு!

தூத்துக்குடி கடலில் சங்கு குளித்த மீனவர் பரிதாப சாவு!
X
தூத்துக்குடி கடலில் சங்கு குளித்தபோது மீனவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி கடலில் சங்கு குளித்தபோது மீனவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி, கீழ அலங்கார தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரதிஷ்ட்டன் (38), சங்குகுளி தொழிலாளி. இவர் இன்று காலை திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து ஒரு படகில் 10பேருடன் கடலுக்குள் சங்கு குளிக்க சென்றார். மதியம் 2 மணி கடலுக்குள் இறங்கிய அவர் நீண்ட நேரமாகியும் மேலே வரவில்லை. அப்போது அவர் கம்பரசரின் வயர் கால் முழுவதும் சுத்திய நிலையில் மயங்கி கிடந்தார்.  உடனடியாக சக மீனவர்கள் அவரை மீட்டு திரேஸ்புரம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story