போதை ஆசாமிகளின் வெறிச்செயல்

மதுரை வில்லாபுரத்தில் நேற்று நள்ளிரவில் போதை ஆசாமிகள் வாகனங்களை அடித்து உடைத்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் 3 கார்கள், 1சரக்கு வாகனம், 2 ஆட்டோ 3 இருசக்கர வாகனத்தின் கண்ணாடிகள் உடைத்து சேதமடைந்துள்ளது. நேற்று (மார்ச்.17) இரவு சுமார் 11 மணி அளவில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழுவினர் கையில் ஆயுதங்களுடன் அப்பகுதியில் உள்ள ஆறுகள் ஆட்டோ சரக்கு வாகனம் மற்றும் பைக்குகள் ஆகியவற்றை கண்ணாடி சீட்டு ஆகியவற்றை சேதப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூச்சலிட்டு சென்றனர் பொதுமக்கள் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் 15 க்கும் மேற்பட்ட ஆட்டோ இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் தற்போது மீண்டும் இதே பகுதியில் வன்முறை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
Next Story