திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், திரைப்பட நடிகர் பிரசாந்த், அவரது தந்தை இயக்குனர் தியாகராஜன் மற்றும் குடும்பத்தினர் நேற்று சாமி தரிசனம் செய்தனர். மூலவரான முருகப்பெருமானுக்கு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story





