நீலகிரி மாவட்டம் ஆதிதிராவிடர் சார்பில் தேர் திருவிழா இன்று உதகையில் நடைபெற்றது

ஸ்ரீ துர்க்கை அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
நீலகிரி மாவட்டம் உதகையில் சித்திரைத் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது இதில் ஆதிதிராவிடர் மகாஜன சபையினர் சார்பில் சங்கம் சார்பில் அம்மனின் திருவீதி உலா நடைபெற்றது இதில் காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்றது பெண்கள் மாவிளக்கு மற்றும் விளக்கு பூஜைகளில் ஈடுபட்டு அம்மனை வழிபட்டனர் மதியம் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் அன்னதானம் நடைபெற்றது மாலை 6 மணி அளவில் அவனின் திருவீதி உலா நடைபெற்றது இதில் ஸ்ரீ துர்க்கை அம்மன் அலங்காரத்தில் ரதம் வாகனத்தில் காட்சியளித்தார் பின்பு ஆடல் பாடல் உடன் அம்மனின் திருவீதி உலா முக்கிய வீதி வழியாக சென்று உதகை மையப் பகுதியில் அமைந்திருக்கும் மாரியம்மன் திருக்கோயிலை வந்தடைந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
Next Story