விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் மொட்டை அடிக்கும் ஆர்ப்பாட்டம்.

ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் மொட்டை அடிக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆரணி, ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் மொட்டை அடிக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2021ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான திட்டங்களான விவசாயிகளிடமிருந்து சிறுதானியங்களை கொள்முதல் செய்து ரேஷன் கடையில் விற்பனை செய்வது, தனிநபர் பயிர் காப்பீடு திட்டம், ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்பனை, விவசாயிகளுக்கு இலவசமாக விதைகள் உள்ளிட்ட 35 திட்டங்களை அறிவித்தார். இதனில் எதையும் நிறைவேற்றதாததால் திமுக அரசு விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றக்கோரி ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் மொட்டை அடிக்கும் போராட்டம் நடத்தினர். இதில் மாவட்டதுணைத்தலைவர் சதுப்பேரி மூர்த்தி, நிர்வாகிகள் வேலப்பாடி பெருமாள், பார்த்தீபன், இளவரசன், தச்சூர் வெங்கடேசன், வேலப்பாடி குப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story