குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் சைபர் குற்றங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மதித்தல் ஆகியவை குறித்து
அப்ளிகேசன் குறித்தும், வங்கிகளில் பணம் செலுத்தும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், மேலும் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் *1930* க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், *www.cybercrime.gov.in* என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு
குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் சைபர் குற்றங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மதித்தல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் திருச்சி மண்டல காவல் துறை தலைவர் K.ஜோஷி நிர்மல் குமார், உத்திரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் V.வருண்குமார், அறிவுறித்தலின்படியும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா வழிகாட்டுதல்படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் (தலைமையிடம்) மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) தலைமையில் இன்று 18.03.2025- ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் ஆரோக்கியராஜ் (பெரம்பலூர் உட்கோட்டம்).பிரபு (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்) நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரன் சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் S.மனோஜ், உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) சிவனேசன், புள்ளியியல் ஆய்வாளர் அ.சாகித் மற்றும் வசந்தா, ஆகியோர்கள் இணைந்து 1. சமூக நீதி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு 2. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பான விழிப்புணர்வு 3. சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு 4. கள்ள சாராயம் மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீங்கு பற்றிய விழிப்புணர்வு 5. சாலை மற்றும் போக்குவரத்து விதி கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் அதிகமாக நடைபெறும் சைபர் குற்றங்களான இணையம் வழியாக நடக்கும் குற்றங்களான ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது பற்றியும், ஏடிஎம் கார்டு மற்றும் ஓடிபி எண் பகிரகூடாது என்பது பற்றியும், வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது என்றும், Part time job fraud, Telegram Task Fraud, வேலை வாங்கி தருவது, E-Bike dealership, கடன் வழங்கும் செயலிகள், ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல், எண்ம நாணயம் (Cryptocurrency) மோசடி, அயல்நாடு வேலைக்கு செல்வது, செல்போன் டவர் வைப்பது, பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்கள், தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து, பாஸ்வேர்டு அடிக்கடி மாற்ற வேண்டுவது குறித்தும், ஆன்லைன் விளையாட்டு குறித்தும், தேவையில்லாத அப்ளிகேசன் குறித்தும், வங்கிகளில் பணம் செலுத்தும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், மேலும் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
Next Story



