தமிழகம் தழுவிய கம்ப ராமாயண விழா ஸ்ரீரங்கத்தில் தொடக்கம்

தமிழகம் தழுவிய கம்ப ராமாயண விழா ஸ்ரீரங்கத்தில் தொடக்கம்
X
தொடக்க விழா மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தால் ஸ்ரீரங்கத்தில் தொடங்கிவைக்கப்பட்டது.
முதன் முறையாக தமிழகத்தில் ’கம்ப ராமாயணம்’ குறித்து மாநிலம் தழுவிய விழாக்களும் கருத்தாக்கங்களும் மத்திய அரசின் சாா்பில் நடத்தப்படுகிறது. ’கம்ப ராமாயணத்தை’ புதுப்பித்து நிலைபெறச் செய்யும் முயற்சிக்கான இந்த நிகழ்வுகளான தொடக்க விழா மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தால் ஸ்ரீரங்கத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. தமிழக அரசுடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கான இந்த விழாவை மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் இந்த தொடக்க நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு இடங்களைச் சோ்ந்த பல கம்ப ராமாயண கலாசார குழுக்கள் பங்கேற்கின்றன. இந்தக் கலாசாரக் குழுக்கள் ராமாயண காவியத்தின் பாரம்பரிய பாராயணங்களையும் அவற்றின் தனித்துவமான சோ்ந்திசையையும் நிகழ்த்தின.முதல் கட்டமாக, ஸ்ரீரங்கம் கோயில் தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு, 108 திவ்ய தேசங்களான திருப்புல்லம்புத்தாங்குடி(தஞ்சை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), திருநீா்மலை (சென்னை), வடுவூா், ராமநாதபுரம், கும்பகோணம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள முக்கியக் கோயில்களில் பாராயண நிகழ்ச்சிகள் நடைபெறும்.
Next Story