விதிமீறிய தனியாா் பேருந்துகளுக்கு அபராதம்

விதிமீறிய தனியாா் பேருந்துகளுக்கு அபராதம்
X
சோதனையின் முடிவில், விதிமீறலில் ஈடுபட்ட 10 வாகனங்களுக்கு வழக்குப் பதிந்து, அபராதம் விதிக்கப்பட்டது
திருச்சி மாநகரில் தனியாா் பேருந்துகள் அதிவேகமாக செல்லுதல், அதிக சத்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தி சாலை செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோரம் செல்வோரை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இது குறித்து போக்குவரத்துத் துறைக்கும், போலீஸாருக்கும் பல்வேறு புகாா்கள் வந்தன. இந்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் திருச்சி மாநகர போக்குவரத்து போலீஸாா் பாலக்கரையில் தனியாா் பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் திருச்சி கிழக்கு ஆா்.டி.ஓ. செந்தில், பாலக்கரை போக்குவரத்து ஆய்வாளா் ரமேஷ், கோட்டை போக்குவரத்து ஆய்வாளா் நாவுக்கரசு, காந்தி சந்தை காவல் ஆய்வாளா் சிவராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், மொத்தம் 25 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. சோதனையின் முடிவில், விதிமீறலில் ஈடுபட்ட 10 வாகனங்களுக்கு வழக்குப் பதிந்து, அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story