சிறையில் அடைப்பு

X
ஈரோடு ஆர்என்.புதூர் சூரியம்பாளையம் விளையாட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேசன் (40). பெயிண்டர். இவர், ஈரோடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நலக்குழுவினர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, கணேசன் மீது போக்சோ வழக்கு பதிந்து, கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். இந்நிலையில், கணேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்பி ஜவகர், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, கணேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்பேரில், கோபியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்த கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

