வனத்துறை எச்சரிக்கை

வனத்துறை எச்சரிக்கை
X
ஆசனூர் சாலையில் நடமாடிய சிறுத்தை வனத்துறையினர் எச்சரிக்கை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், கரடி காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு தண்ணீர் தேடி அவ்வப்போது வனவிலங்குகள் தமிழகம் -கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் சக்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வருவது வழக்கம். இந்நிலையில் ஆசனூர் வனச் சோதனை சாவடி அருகே சக்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சிறுத்தை அங்கும் இங்கும் உலாவி கொண்டிருந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டனர். சில வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் சிறுத்தையை வீடியோ போட்டோ எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். செல்போன் வெளிச்சத்தை கண்டார் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ஆசனூர் வனப்பகுதியில் செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. ஆசனூர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களையும் நிறுத்த வேண்டாம். இதேபோல் வன விலங்குகளை போட்டோ, வீடியோ எடுப்பதையும் வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும் என்றனர்.
Next Story