பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் பஸ் பயணியர் உடைமைகள் அறை

X
காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வரும், பயணியரின் வசதிக்காக, 2015ம் ஆண்டு, 'பிரசாத்' எனப்படும், இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் கீழ், யாத்திரை புத்துயிராக்கம் மற்றும் ஆன்மிகம் பெருக்குதல் இயக்கம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.இத்திட்டத்தின், ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணியர் உடைமையை பாதுகாப்பாக வைத்துவிட்டு, கோவில்களுக்கு சென்று வரும் வகையில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், தாம்பரம் செல்லும் பேருந்துகளுக்கான நேர காப்பாளர் அலுவலகம் அருகில், 5.48 லட்சம் ரூபாய் செலவில் உடைமைகள் பாதுகாக்கும் அறை, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் வாயிலாக கட்டப்பட்டது. கட்டுமானப் பணி முடிந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும், உடைமைகள் பாதுகாப்பு அறை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், பயணியரின் வசதிக்காக, மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தின் நோக்கமே வீணாகும் நிலை உள்ளது. எனவே, லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வீணாகி வரும், சுற்றுலாப் பயணியரின் உடைமைகள் பாதுகாப்பு அறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

