செஞ்சியில் போக்சோ வழக்கு வாலிபர் கைது

X
செஞ்சி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு செஞ்சி அரசு மருத்துமனைக்கு அழைத்து வந்தனர். டாக்டர்கள் சோதனை செய்ததில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.இது குறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில் காட்டுசித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவரான சரவணன் மகன் வினித்குமார், 23: பாலியல் பலாத்காரம் செய்தது தெரிவந்தது.இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வினித்குமார் மீது செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
Next Story

