குடிசை மாற்று வாரியம் வீடுகள் சேதம் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை

X
தூத்துக்குடி கோமஸ்புரம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை முறையாக பராமரிக்காத காரணத்தினால் வீடுகள் சேதம் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் குடிசை மாற்று வாரியம் பொதுமக்களை காலி செய்யக் கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளதால் மக்கள் பாதிப்பு
தூத்துக்குடி அருகே கோமஸ் புரம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் ராஜீவ் காந்தி நகர் உள்ளது இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இந்நிலையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் இந்த வீடுகளை ஆண்டுதோறும் முறையாக பராமரிக்காததால் தற்போது வீடுகள் இடிந்து சேதமடைந்த நிலையில் உள்ளது பல வீடுகளில் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு மேற்கூரை இடிந்து விழுந்ததில் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார் இந்நிலையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் சில வீடுகளை மட்டும் பழுதுபபார்த்து விட்டு அனைத்து வீடுகளையும் பழுது பார்க்க முடியாது இங்கு பொதுமக்கள் வசிப்பதற்கு தரமற்ற கட்டிடமாக உள்ளது எனவே உடனடியாக இந்த குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் காலி செய்ய வேண்டுமென நோட்டீஸ் வழங்கி உள்ளது ஆனால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் ரூபாய் 41 ஆயிரம் கொடுத்து இந்த குடிசை மாற்று வாரிய வீட்டை வாங்கி உள்ளனர் இங்கு வசித்து வரும் அனைவரும் சாதாரண கூலித்தொழில் உள்ளிட்ட தொழிலையே செய்து வருகின்றனர் இதன் காரணமாக தாங்கள் எங்கு செல்வது என தெரியாமல் உள்ளதாகவும் குடிசை மாற்று வாரியம் தங்கள் வீடுகளை முறையாக பராமரித்து பாதுகாப்பாக வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர் மேலும் குடிசை மாற்று வாரியம் சார்பில் இந்த பகுதியில் இருந்து உடனடியாக காலி செய்ய வேண்டும் நாங்கள் கட்டிடத்தினை இடிக்க போகிறோம் என மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது மேலும் மாற்று இடம் 3 1/2 லட்சம் பணம் செலுத்தினால் தங்களுக்கு வழங்கப்படும் என கூறி வருகின்றனர் இதன் காரணமாக குடிசை மாற்று வாரிய பகுதிகள் வசித்து வரும் பொதுமக்கள் இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
Next Story

