முத்து மாரியம்மன் வேண்டிய வரங்களை தருவாள் பங்குனி மாதத்தில் சிறப்பு பூஜை

சங்குப்பேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆலயத்தில் வேண்டிய வரங்களை கொடுப்பார் முத்து மாரியம்மன் நம்பிக்கையுடன் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
பெரம்பலூர் சங்குபேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி மாதம் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் நகரம் சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் இத்திருக்கோயிலில் பங்குனி மாதம் அம்மனுக்கு, பால், தயிர்,பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீ முத்துமாரியம்மனை வன்ன மலர்கள், எலுமிச்சை மாலைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகளும், சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை திரளான பக்தர்கள் வழிபட்டு சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை போட்டு, விரதம் இருந்து அக்கினி சட்டி எடுத்து வழிபட்டனர் .இந்நிகழ்ச்சியை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூசாரி வெ.நீதிதேவன், ஊர் பொதுமக்கள் மாயம்மா குழுவினர். செய்தனர். பங்குனி மாத விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பெரம்பலூர் சங்குபேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் வேண்டிய வரங்கள் தரும், என பக்தர்கள் கூறுகிறார்கள்.
Next Story