ஆம்பூர் அருகே பல நாட்களாக ரயில்வே கேட் மூடியே இருப்பதால்

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பல நாட்களாக ரயில்வே கேட் மூடியே இருப்பதால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்ல தோளில் சுமந்து சென்று சிரமத்திற்குள்ளாகும் மக்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னடிகுப்பம் கிராமத்தில் பல ஆண்டுகளாக ரயில்வே கேட் செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் இந்த ரயில்வே கேட் வழியாக, காட்டுக்கொல்லை, ரங்காபுரம், வெள்ளகுட்டை, ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல இந்த ரயில்வே கேட் பாதை முக்கிய பாதையாக உள்ள நிலையில், இந்த ரயில்வே கேட்டை தாண்டியும், கன்னடிகுப்பம் ஊராட்சியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ரயில்வே கேட் கடந்த 5 வாரங்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளதால், அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 1 கிலோ மீட்டர் தூரம் சுற்றியே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை அடையும் நிலை உள்ளது, இந்நிலையில் இன்று கன்னடிகுப்பம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை கன்னடிகுப்பம் கிராம சம்பிரதாயம் படி ரயில்வே கேட் வழியாகவே மயானத்திற்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்ட நிலையில், ரயில்வே கேட் மூடியிருந்த நிலையில், மிகுந்த சிரமம்பட்டு நாகராஜின் உடலை அப்பகுதி மக்கள் தோளில் சுமந்தவாறு ரயில்வே கேட்டை கடந்து மயானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் மேலும் ரயில் வரும் நேரங்களிங் கேட்டை மூடி வைக்கும்படியும், மற்ற நேரங்களில் ரயில்வே கேட்டை திறக்கும் படியும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர், 5 வாரங்களுக்கு மேலாக ரயில்வே கேட் மூடியே இருப்பதால், பள்ளி, கல்லூரி, மாணவர்கள், பணிக்கு செல்லும், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்க்குள்ளாகுவதாக அப்பகுதிமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்..
Next Story

