மகனை கொத்தடிமையாக அனுப்பிய தாய் குழந்தை தொழிலாளர் தடை சட்டத்தில் கைது

X
ஜெயங்கொண்டம் மார்ச்.19- ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி கிராமத்தில் 13 வயது மகனை கொத்தடிமையாக அனுப்பிய தாய் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து 1098 என்ற எண்ணிற்கு ஃபோன் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த குழந்தைத் தொழிலாளர் உதவி ஆய்வாளர் தேவேந்திரன், வழக்குப் பணியாளர் வீரமணி, ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் அன்பு செல்வன் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் இவர் தனது ஆடுகளை வளர்ப்பதற்கு கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி பூராசாமி மகன் ரஜினி குமார் (13) என்ற சிறுவனை வருடத்திற்கு ரூபாய் 70 ஆயிரம் என சிறுவனது தாய் விசாலாட்சி இடம் பேசி கடந்த இரண்டு மாத காலமாக நேரம் சம்பளம் வரைமுறை செய்யாமல் வைத்து ஆடு மேய்த்து வந்தது தெரியவந்தது இதை சிறுவனும் அவனது தாய் விசாலாட்சியும் ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து மீன்சுருட்டி காவல் நிலையத்தில் பாப்பாக்குடி வடக்கு கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணனால் புகார் தெரிவிக்கப்பட்டு குழந்தைத் தொழிலாளர் சட்டம் மற்றும் கொத்தடிமை தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாலாட்சி மற்றும் அன்புச்செல்வன் ஆகியவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாலாட்சியை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுவனை அரியலூர் மாவட்ட குழந்தைகள் நல மைய வழக்கு பணியாளர் வீரமணி மூலம் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Next Story

