மின்சார ரயிலில் பயணித்த பெண்ணிடம் செல்போன் பறிப்பு : இரண்டு பேர் கைது

மின்சார ரயிலில் பயணித்த பெண்ணிடம் செல்போன் பறிப்பு, ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்.ரயிலில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சி அடிப்படையில் 2 பேர் கைது செய்த ஆவடி இருப்பு பாதை காவல்துறையினர்
சென்னை புறநகர் மின்சார ரயிலில் பயணித்த பெண்ணிடம் செல்போன் பறிப்பு, ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்.ரயிலில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சி அடிப்படையில் 2 பேர் கைது செய்த ஆவடி இருப்பு பாதை காவல்துறையினர் திருவள்ளூர் அடுத்த புட்லூர் உல்லாசம் நகரைச் சேர்ந்தவர் சாந்தி, 55. இவர், சென்ட்ரலில் இருந்து அண்ணனூர் மார்க்கமாக திருவள்ளூர் செல்லும் புறநகர் மின்சார ரயிலில், கதவு அருகே அமர்ந்து பயணம் செய்துள்ளார். அண்ணனூரில் ரயில் நின்றபோது, மர்மநபர் ஒருவர், சாந்தியின் மொபைல் போனை பறித்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி, அவரை பிடிக்க முயன்ற போது, மர்ம நபர் தள்ளிவிட்டதில் ரயிலில் இருந்து நடைமேடையில் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.பலத்த காயமடைந்த சாந்தி கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விசாரித்த ஆவடி ரயில்வே போலீசார், வழிபறியில் ஈடுபட்ட திருநின்றவூர், கெங்கு ரெட்டி குப்பத்தைச் சேர்ந்த ராகுல், 25 மற்றும் அவரிடம் திருட்டு போனை வாங்கிய பெரம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், 39 ; ஆகியோரை ஆவடி ரயில்வே போலிசார் கைது செய்தனர்.
Next Story