பஸ் நிறுத்தத்தில் சுருண்டு விழுந்த முதியவர் சாவு

பஸ் நிறுத்தத்தில் சுருண்டு விழுந்த முதியவர் சாவு
X
மணவாளக்குறிச்சி
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே சின்ன விளை ப்பகுதியை சேர்ந்தவர் யாேனோக் எலியாஸ் (45). இவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது தந்தை ஆண்ட்ரூஸ் (69)  வயது முதிர்வு காரணமாக தன்னுடைய மகனின் பராமரிப்பில் இருந்து வந்தார். சம்பவ தினம் இவர் வெளியே செல்வதற்காக தன் மகனிடம் சொல்லிவிட்டு மணவாளக்குறிச்சி பேருந்து நிறுத்த இருக்கையில் அமர்ந்து அமர்ந்து பேருந்து வருவதற்காக காத்திருந்தார்.      அப்போது அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது மகன் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி ஆன்ட்ரூஸ் நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவர் மகன் கொடுத்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story