வாழை இலையில் மண் போட்டு சாப்பிட்டு நூதன போராட்டம்

சிவில் இன்ஜினியர் சங்கம் சார்பில் உதகை ஏடிசி திடலில் நூதன ஆர்ப்பாட்டம்
நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பதை கண்டித்து நீலகிரி சிவில் இன்ஜினியர் சங்கம் சார்பில் வாழை இலையில் மண் போட்டு சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் இயற்கை எழில் கொஞ்சம் நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில நீலகிரி மாவட்டத்தில் கட்டுமானம் சார்ந்த தொழிலில் உள்ள அனைத்து அமைப்பினரும் வீடு கட்ட வேண்டும் என்று நீண்ட காலமாக வரைபடம் அங்கீகாரம் பெறாமல் காத்திருப்பில் உள்ளதாகவும், அனைத்து மக்களும் கட்டுமானம் மற்றும் அதை சார்ந்த தொழிலில் உள்ள தொழிலாளர்கள் நீண்ட காலமாக கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்காததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கட்டிடங்கள் கட்டு அனுமதி மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இன்று உதகை ஏடிசி பகுதியில் நீலகிரி சிவில் இன்ஜினியர் சங்கம் சார்பில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் வாழை இலையில் மண் பரிமாறப்பட்டு அதனை சாப்பிடும் ஆர்ப்பாட்டத்தில் மேற்பட்ட இன்ஜினியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் தேயிலைக்கு விலை இல்லாதது, ePass தடை, கட்டிட அனுமதி மறுப்பு சில்லள்ளா அணை கட்டுவது உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story