பள்ளி மாணவர்களுக்கு நெகிழி மறுசுழற்சி பயன்பாடு குறித்த

விழிப்புணர்வு போட்டி -120 மாணவர்கள் பங்கேற்பு
நாகை மாவட்டம் மாவட்டம் ஈகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில், மீண்டும் மஞ்சப்பை என்ற தலைப்பில் நெகிழி மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு போட்டி இணைய வழியில் நடைபெற்றது. நாகை மாவட்டத்திலிருந்து, பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சுமார் 120 மாணவ, மாணவிகள், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் கலந்து கொண்டனர். இதில், ஜூனியர் பிரிவில் பாப்பாக் கோயில் சர் ஐசக் நியூட்டன் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர் விஷ்ணு முதலிடமும், செட்டித்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 6 -ம் வகுப்பு மாணவி நிஷாந்தினி 2 -வது இடமும், ஆயக்காரன்புலம் ஆர்விஎஸ் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 7- ம் வகுப்பு மாணவி யாகவி மற்றும் ஆதமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி வேதிகா ஆகியோர் 3-வது இடமும் பெற்றனர். சீனியர் பிரிவில், நாலுவேதபதி சீனிவாசனார் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9 -ம் வகுப்பு மாணவி சிவநிஷ்ஸ்ரீ முதலிடமும், திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி தரணிகா 2-வது இடமும், ஆதமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 10 -ம் வகுப்பு மாணவி ஹரிணி மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும், புத்தகமும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து பெறப்பட்ட மீண்டும் மஞ்சப்பையும் விழிப்புணர்வை முன்னிட்டு வழங்கப்பட்டது. போட்டியை, சுற்றுச்சூழல் அமைப்பின் மாவட்ட செயலாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் ஒருங்கிணைத்தார்.
Next Story