வேதாரண்யம் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக

X
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த பகுதியில், சுமார் 5 ஆயிரம் டன் முந்திரி காய் விளைச்சல் ஏற்பட்டு விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், கஜா புயலில் சேதமடைந்த முந்திரியை விவசாயிகள் பராமரித்து தற்போது மரங்கள் நன்கு வளர்ந்து, நன்றாக பூத்து காய்க்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், கடும் வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய முந்திரி சாகுபடி, தற்போது இரவு நேரங்களில் கடும் பனி பொழிவு, பருவம் தவறிய மழை பெய்ததால் முந்திரி சாகுபடி கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. ஆங்காங்கே முந்திரி சாகுபடியில் கடுமையான பூச்சி தாக்குதாலும் காணப்படுகிறது. வெயில் தாக்கத்தினால் முந்திரி நன்றாக விளையும் என்று விவசாயிகள் நம்பி இருந்த வேளையில், இரவில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாகவும், அவ்வப்போது பெய்யும் கோடை மழையாலும், பூச்சி தாக்குதல் காரணமாகவும், இந்த ஆண்டு கடுமையாக முந்திரி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடும் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது, எனவே, தோட்டக்கலைத் துறை தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

