வாட்டர் கேனில் வாங்கிச் சென்ற பெட்ரோல் கலப்பட பெட்ரோல் என சந்தேகமடைந்து பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் முறையிட்ட இளைஞரால் பரபரப்பு

பரபரப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மதுராபுரி பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான சாய் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்தப் பெட்ரோல் பங்கில் மதுராபுரியைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி சென்று உள்ளார் அப்போது பெட்ரோலின் நிறம் மாறி இருந்ததாக சந்தேகம் அடைந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு வந்து வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி உள்ளார் அப்போது முன்பு வாங்கிச் சென்ற பெட்ரோலின் நிறமும் தற்போது வாங்கி உள்ள பெட்ரோலின் நிறமும் வெவ்வேறாக உள்ளது எனக் கூறி பங்கின் உரிமையாளரிடம் இளைஞர் கேட்டுள்ளார் அதற்கு முறையாக பதில் அளிக்காமல் இருந்ததால் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் இது குறித்து அல்லிநகரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததை தொடர்ந்து அல்லிநகர போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டனர் பின்னர் கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெட்ரோல் மற்றும் அதன் பிறகு வாட்டர் கேனில் பிடித்த பெட்ரோல் என இரண்டையும் பரிசோதனை செய்வதற்காக போலீசார் எடுத்துச் சென்றனர் இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையா கூறுகையில் அந்த இளைஞர் வாடிக்கையாக வந்து தன் பைக்கில் பெட்ரோல் போட்டுவிட்டு செல்வார் என்றும் இன்று தான் வாட்டர் கேனில் பிடித்து விட்டு சென்று கலப்படம் செய்து விட்டதாக பொய்யாக பிரச்சனையில் ஈடுபடுவதாக தெரிவித்தனர் இந்நிலையில் பெட்ரோல் கலப்படம் செய்யப்பட்டதாக வந்த புகாரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பப்பட்டது
Next Story