உலக காச நோய் தின விழா

X
Komarapalayam King 24x7 |19 March 2025 5:14 PM ISTகுமாரபாளையத்தில் உலக காச நோய் தினவிழா கொண்டாடப்பட்டது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அன்னை ஜே..கே.கே.சம்பூரணி அம்மாள் மருந்தாளுனர் கல்லூரியில்உலக காச நோய் தினத்தையொட்டி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் தேசிய காச நோய் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி தலைவர் வசந்தகுமாரி முனிராஜா, தாளாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட காச நோய் திட்ட ஒருங்கிணைப்பாளர் கபில் பங்கேற்று, காசநோய் பரவும் விதமும், முன்னெச்சரிக்கையாக தடுக்கும் விதம் குறித்தும் பேசினார். குமாரபாளையம் அரசு மருத்துவமனை காசநோய் டாக்டர் அருள்மணி பங்கேற்று, காசநோய் பரிசோதனை மற்றும் அதற்கு பயன்படுத்தும் மருந்துகள் பற்றியும் பேசினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சதீஷ்குமார், மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story
