மனைவி மண்டையில் சுற்றியலால் அடித்த கணவன் 

மனைவி மண்டையில் சுற்றியலால் அடித்த கணவன் 
X
புதுக்கடை
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே மாராயபுரம் பகுதி, தேரிவிளையை சேர்ந்தவர் ரமேஷ் (52). இவரது மனைவி ஜெனிபா (48). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கூலித் தொழிலாளியான ரமேசுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் போதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம்.      நேற்று இரவு சுமார் 09:00 மணிக்கு கணவனுக்கும் மனைவிக்கும் வீட்டில் வைத்து ஏற்ப்பட்ட சண்டையில் ரமேஷ் குடிபோதையில் வாதியின் தலையில் சுற்றியலால் அடித்து காயப்படுத்தினார். இதில் படுகாயம் அடைந்த மனைவி  ஜெனிபாவை வீட்டின் குளியல் அறையில் தூக்கி போட்டுவிட்டு புதுக்கடை  காவல் நிலையம் வந்து தகவல் தெரிவித்தார்.       புதுக்கடை போலீசார்  உடனே சம்பவ இடம் சென்று பார்வையிட்டு ஆபத்தான நிலையில் காணப்பட்ட ஜெனிபாவை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரமேஷை கைது செய்து விசாரித்து  வருகின்றனர்.
Next Story