பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனுக்கு உற்சாக வழிபாடு.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பகவதி அம்மன் கோவில் மாசி மாதம் நடைபெறும் 2 நாட்கள் திருவிழா நேற்று பெண்கள் கரகம் எடுத்து, இரவு முழுவதும் வீதி உலா சென்று திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பகவதி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தீச்சட்டி எடுத்தும் மற்றும் காவடி எடுத்தும் பெரியகுளம் முக்கிய வீதிகள் ஆன பகவதி அம்மன் கோவில் தெரு, அரண்மனை தெரு, சுப்பிரமணிய சாவடி தெரு, தேரடி வீதி, மேலரது வீதி உள்ளிட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக சென்று அருள்மிகு பகவதி அம்மனுக்கு தங்கள் தீச்சட்டி மற்றும் காவடி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து பகவதி அம்மனுக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த பால்குடத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலையில் பால்குடம் வைத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று அருள்மிகு பகவதி அம்மனுக்கு தங்கள் நீதி கடனை செலுத்தி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
Next Story




