மும்மொழிக் கல்வியை ஆதரித்து திருச்செங்கோட்டில் கல்லூரி மாணவர்களிடையே கையெழுத்து இயக்கம்
அரசு பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களைப் போல் மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு மொழி கற்க வேண்டும் என்பதை கையெழுத்து இயக்கம் மூலம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக திருச்செங்கோடு தெற்கு ஒன்றியம் சார்பில் K.S.R கல்லூரி அருகில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்டத்தலைவர் ராஜேஷ் குமார் அவர்களின் ஆலோசனைப்படி தொடங்கப்பட்டது.இதில் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் ஆதரவு தெரிவித்து கையொப்பம் இட்டனர்.இதில் மாநில,மாவட்ட,நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Next Story



